Friday, September 13, 2013

கன்னியை தேடி நான் செல்கையிலே



காதல் சொல்ல நினைக்கயிலே
காலன் வந்து மிரட்டுகிறான் !!!

காவியம் பாட நினைக்கையிலே
கன்னியவள்  கற்பனையை களவாடுகிறாள் !!!

பாடம் படிக்கச் செல்கையிலே
பாவி அவள் பாட்டிசைக்கிறாள் !!!

போருக்கு போகும் வேளையிலே
பூவானவள் பூகொண்டு போர்தொடுக்கிறாள்

கன்னியை தேடி நான் செல்கையிலே
காசி தீர்த்தம்  என்னை தேடி வருகிறது !!!

சோதனை சோதனை சோதனை !!!

தேடவில்லை ...ஆனால் கிடைத்தது ... காரணம் தான் தெரியவில்லை

மோகம் தேடவில்லை
ஆனாலும் மோசம் போகிறேன்
பாசம் என்னும் வாசம் கொண்டதால்

சோகம் இல்லை
ஆனாலும் சோர்ந்து போகிறேன்
சொந்தம் என்னும் சுமை கொண்டதால்

விதி இல்லை
ஆனாலும் விளையாட போகிறேன்
மதி என்னும் மாயை கொண்டதால்

பழி இல்லை
ஆனாலும் பழிதீர்க்க போகிறேன்
தன்மானம் என்னும் துணை கொண்டதால்

பயன் இல்லை
ஆனாலும் பயணிக்க போகிறேன்
பந்தம் என்னும் பிணைப்பு கொண்டதால்

வழி இல்லை
ஆனாலும் வாழ்த்த போகிறேன்
உறவு என்னும் மாயை கொண்டதால்

கண்கள் இல்லை
ஆனாலும் கனவு காண்கிறேன்
களவு என்னும் உள்ளம் கொண்டதால்

கன்னி இல்லை
ஆனாலும் களவாட போகிறேன்
தனிமை என்னும் உலகம் கொண்டதால் !!!

Tuesday, August 20, 2013

காதல் கொள்கிறது என்னை ...



********************************************
காதல் கொள்கிறது என்னை ...
கண் மூடி திறக்கும் முன்னே ...
********************************************

ரங்கனின் பாதம் பணியாதே
என் நாயகர் கால் வருடி செல்லடி
நீ கரை தொடும்போதெல்லாம்
என் கோபம் கரை தாண்டுகிறதடி

கனவெல்லாம் நீயே
கண் திறந்து பார்த்தாலும் நீயே
கானல் நீராய்...

மெய்யாக வர பொழுதுதில்லையோ
இல்லை வரத்தான் பிடிக்கவில்லையோ ???

விரும்பினேன் உன்னை
உன் அழகிற்காக
உன் அடக்கத்திற்காக
உன் அசைவிற்காக

உள்ளவர்களை விடவும் உனக்கு
உயர்வான வாழ்கை என்னால் தரமுடியும்
உயர்வானவன் நான் என்பதை
உலகாளும் ஈசனிடம் தெரிந்துகொள் !!!

வருவேன் வருவேன் என்று
பொய் உரைத்து வதைத்தாய்
வந்த பின் வழிந்தோடினாய்
சொல்லாமல் என்னை விட்டு

நீ படி துறை தாண்டுகையில்
என் பாதி உயிர் போச்சுதடி ...

உடனே உயிர் பெற்று வா
என் உறவிற்கு உயிர் கொடுக்க
தனிமையின் சுகத்தை தந்தாய்
என்னை தனிமையிலும் கிடத்திவிட்டாய்
இன்னும் என்ன என்ன திட்டமோ
சொல்லிவிடு என் மோகினி ...

கங்கையின் மேலானவள் நீ என்றால்
நான் மணக்க தகுதி உடையோள் நீயே
நீ மணக்க தகுதி பெற்றவனும் நானே

நினைவெல்லாம் நீயே
நிஜமெல்லாம் நீயே
கணவெல்லாம் நீயே
கண் பார்க்கும் இடமெல்லாம் நீயே
வாசனைகள் எல்லாம் நீயே
வார்த்தைகள் அனைத்திலும் நீயே

மோகம் இல்லை உன் மீது
யோகம் உண்டு உன்னை அடையும்போது !!!

வஞ்சி கொடியே
வாசனை மல்லியே
வற்றாத வசந்தமே ...

நிச்சயம் நீ சிந்தித்து இருக்க மாட்டாய்
என்னை உன் மணாளனாய்
என்னை உன் வாழ்க்கை துணையாய்
என்னை உன் சரி பாதியாய்

சில நொடிகள் நின்று செல்
எனக்காக சிந்தனை செய்
ராஜ ராஜேஸ்வரத்தில்
இந்த யுவராஜனை நினைத்து ...

உனக்கு நிச்சயம் புலப்படும்
கடாரம் வென்ற சோழனும் நானே
கழனிகளில் உன்னை ஊடரத்துவனும் நானே
உன் பிரியமான தோழனும் நானே
உன் பட்டம் பெற்றவனும் நானே
உன்னை பாடியவனும் நானே
ஞானியும் நானே

போதும் என் பாட்டு...

புரிந்தால் கூட்டி செல் என்னை
பூம்பட்டினத்திற்கு
இல்லையேல்
காத்திருப்பேன் கன்னி காலமெல்லாம்
உன் பயண சுகம் கண்டு
கரையோரம் கீதம் இசைப்பேன்
உன் காட்சி கண்டு ...

நீ வாழ நலமுடன்
உன் காதோரம் இசைத்து பாடுவேன்
"
வஞ்சி வாழிய வாழியவே " என்று ...

--------------------------------------------------------------
என் பாட்டும் புதிர்கள் போடும்
அது உனக்கு புரிந்தால் போதும்
--------------------------------------------------------------

சிலேடை ...
என் இரு மனைவியரை நினைத்து ...!!! 

Sunday, April 21, 2013

~~~ கடல் முன்னோடி - தமிழன் - :::மீனவன்::: ~~~

கடல் முன்னோடி - தமிழன்

மீனவன் ...

காற்று ,  மழை , புயல் , கொந்தளிப்பு , கோடை , குளிர் , பசி , பிணி , தூக்கம் என பல விடயங்களை ஒருங்கே சமாளிக்க கற்று  கொண்டவன் நம் "மீனவன் " மட்டுமே ...

கழனிகளின் நாயகன் உழவன் என்றால் , கடலின் அரசன் மீனவனே ...

மீனவனின் வாழ்கை ...

நாமெல்லாம் தொழில்நுட்ப வளர்ச்சியால் பெற்றுவிட்டோம் பல வாகனங்களை  நம் அத்தியாவசிய தேவைக்கும் ஆடம்பரத்திற்கும் ... ஆனால் மீனவனின் வாழ்க்கை இன்று வரை "கட்டு மரத்துடன் " மட்டுமே  காலம் கழிக்கிறது .

கொள்ளை அடிக்கும் அரசாங்க ஊழியனுக்கு தெரியாது , மண்ணெண்ணையின்  அருமை ... அராஜகம் செய்யும் அரசியல் கட்சிக்கு புரியாது "டீசெல் " விலை  ஏற்றத்தின் பாதிப்பு ...

கட்டு மரமும் கிழிந்து போன வலையுமே மீனவனின் நிரந்தர சொத்து ... நாமெல்லாம் வெளியில்  பயணம் மேற்கொள்ளும் போது நாம் மீண்டும் வீடு திரும்புவோம் என்பதில் உள்ள பாதி  உத்திரவாதம் கூட கிடையாது மீனவன் கடலுக்குள் பயணிக்கும் போது

நம்பிக்கை , தைரியம் இந்த இரண்டை மட்டும் நம்பி கடலுக்குள் செல்லும் மீனவன் தன் அத்தனை இடர்களையும் தனித்தே சமாளிக்கிறான் .

கடலில் அவன் தோணி ஆடுகையில் , மீனவன் வீட்டு  பெண்களின் இதயம் கண்ணீர் என்னும் கடலில் தத்தளித்து கொண்டுதான் இருக்கிறது ... சென்ற கணவன் வீடு திரும்பவேண்டும் என்று ஒவ்வொரு கனத்தையும் நெஞ்சில் கனமாக தாங்கி காலம் கழிக்கும் மீனவ பெண்கள்  வாழ்க்கையை  கடவுளாலும் வாழ முடியாது .

உப்பு காற்றும் , நீரும் அவன் உடலோடு ஒன்றி போன ஒரு விசயம். மீனவனையும் , உப்பையும் பிரிப்பது என்பது இயலாத காரியம் .

ஆடும் தோணியில் பயம் அற்று  நின்று பயணத்தை தொடங்கும் மீனவன் கரை முதலே இடர்களை சந்திக்கிறான் .

ஆரவாரம் இல்லாத கடலில் அசுரத்தனமாய் அடித்து அழிக்கும் "சுழி காற்று " ,
சமுத்திரத்தை குடித்து  தாகத்தை தீர்க்க நினைக்கும் "சுறா மீன் " ,
அடித்து அழவைக்கும் "பேய்மழை ",
பிரளயம் போல் "கடும் கொந்தளிப்பு "
கண்னுக்கு எட்டிய வரை நீர் இருபினும் "தாகத்தை " தீர்க்க முடியாது கொடுமை ,
வதைக்கும் சூரியன் மறைந்தபின் வாட்டும் "கடும் குளிர்",
போராடும் தேகத்துக்கு போதுமான "சத்தான உணவு ",
தனித்து விடப்பட்ட மைதானத்தில் சித்திரகுப்தனிடம் போடும் கணக்கு சண்டை  "பிணி ",
குறித்த நேரத்தில் கரை திரும்ப வேண்டி தியாகம் செய்யும் "தூக்கம்"...

இத்தனையும் எதிர்கொண்டு மீனவன் போராடி  கரை சேரும் போது  தான் , உண்மையில் அவன் சவால்களை சந்திக்கிறான் ...

அல்லும் பகலும் அளவில்லாமல் அயராது உழைத்த அவனுக்கும, அவன் மீன்களுக்கும் எவனோ ஒருவன் சம்பந்தம் இல்லாதவன் விலை பேசுகிறான் இடை தரகு செய்கிறான் ...

அவனால் கடின பட்டாவது "நில மக்களின் " வாழ்கையை வாழ்ந்து விட முடியும் , ஆனால் நம்மால் ஒருகாலும் ஒரு கணம் கூட அவன் வேதனையான வாழ்கையை வாழ முடியாது ...

இத்தனை  பெரும் புயலானது "மீனவனின் வாழ்க்கை "!!!

இன்றோ ...

நம் தமிழ் மீனவனின் நிலைமை சொல்லும் அளவுக்கு இல்லை ...

சுராவிடம் தப்பினாலும் ,
புயலிடம் போட்டி இட்டு வென்றாலும் ,
பசி , தூக்கம் , பிணி  மறந்தாலும் ....

சிங்களவனிடம் தப்ப முடியாது ... அவன் எல்லை மீறி வந்து நம்மை நம் எல்லைக்குள் செய்யும் அட்டுழியம் "துபபாக்கி சூடு, தாக்குதல் "...

என்ன உரிமை இருக்கிறது ஒரு மனிதனின் உரிமையை எடுப்பதற்கு , எவர்  எழுதி குடுத்தது அவனுக்கு உயிர் எடுக்கும் உயரிய பணியை  சாசனமாக ...

இவை எல்லாம் நிலத்தில் வாழும் சில இரண்டு கால் கழுதைகளும் , நரிகளும் , பூனைகளும் செய்த அக்கரம வேலை ... அவன் மஞ்சனையில் "தூபம் " போடுவதற்காக , மீனவன் வீட்டு "பசி நெருப்பை" கொள்ளை  அடிக்கிறான் ....

கச்ச தீவை தாரை வார்த்த கயவர்களை எங்கே அவர்கள் சொத்தில் "ஒரு ரூபாயை " கடன் குடுக்க சொல்லுங்கள் பார்போம் ...

கண்மூடித்தமான மனிதர்கள் இருக்கும் வரை கயவர்கள் ஒழிய போவது இல்லை , ஆம் பதவிக்கும் , பணத்திற்கும் வேஷம் கட்டும் கொடியவனை "அமைச்சன் " என்று வாக்களித்து "கோட்டைக்கும் " , "ஜனநாயகம் மன்றத்துக்கும் " அனுப்பும் மக்கள் இருக்கும் வரை கொள்ளையர்கள் நம் வயிற்று பசி என்னும் அடுப்பில் குளிர் காயத்தான்  செய்வார்கள் ...

ஒரு உயிரை பரிப்பவனை எதிர்த்து மனிதாபிமானத்தை கேட்க சொன்னால் , "நட்பு நாடு " என்று வேஷம் கட்டுகிறார்கள்  உண்மை கொலைகாரர்கள் . அவனுக்கு சிவப்பு  கம்பள வரவேற்பு ... இது , திருடனை வீட்டுக்குள் வைத்து கொண்டு ஊருக்கு வெளியில் இருப்பவனை குற்றம் சுமத்துவது நம் தவறே ...

ஜனநாயகத்தில் என்ன பெற்றுவிட்டது இந்த மீனவ சமுதாயம் . குறைந்த பட்சம் இந்த ஜனநாயகம் "உயிர் உத்திரவதமாவது " தந்து இருந்தால் பரவாயில்லை .

இதற்கு மன்னர் ஆட்சி மிக சிறந்தது ...!!! எம் சோழர்களும் பாண்டியர்களும் எங்கே , இந்த பேடி  தனமான் நாய்கள் எங்கே ...

ஒவ்வொரு வாக்குரிமை பெற்றவனும் இதனை  சிந்திக்க வேண்டும் ... வரும் தேர்தல் வாழ்கையை , தமிழன் தொலைத்த வாழ்க்கையை மீட்டு  எடுக்க வழி பெற வேண்டும் ...!!!

---ராஜ் !